தனது படம் தோல்வி என்றால் நூறு கட்டுரைகள் வருகின்றன, ஆனால் மற்ற படங்கள் தோல்வி என்றால் எவரும் வாய்திறப்பதில்லை என நடிகை கங்கனா ஆவேசமாக கேட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை

பாலிவுட் திரையுலகில் அசைக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வரும் கங்கனா ரனாவத், பங்கா, ரங்கூன், குயின், தலைவி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர். ‘கேங்ஸ்டர்’ திரைப்படம் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர், முதல் படத்திலேயே தனது நடிப்பால் முத்திரை பதித்தார். சினிமாவை தாண்டி அரசியல் கருத்துகளையும் துணிச்சலாக முன்வைக்கும் இவருக்கு, ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே அளவிற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

காட்டம்

கங்கனா ரனாவத் நடித்த இந்தி படங்கள் நல்ல வசூல் குவித்து வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான தாகத் திரைப்படம் தோல்வி அடைந்தது. ரூ.85 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.3 கோடி அளவுக்கு மட்டுமே வசூலை சந்தித்தது. தோல்வி காரணமாக படத்தை வாங்க OTT தளங்களும் முன்வரவில்லை. இந்த நிலையில், நடிகை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; ”தினமும் தாகத் படம் தோல்வி என்று வெளியாகும் செய்திகளை பார்க்க முடிகிறது. தாகத் தோல்வி படம் என்று நூறு கட்டுரைகள் வருகின்றன. ராதே ஷ்யாம், கங்குபாய் கத்யாவாடி, ஜுக் ஜுக் ஜியோ உள்ளிட்ட பல படங்கள் தோல்வி அடைந்துள்ளன. அதை பற்றி யாரும் பேசுவது இல்லை. இதற்கு என்ன காரணம். தாகத் மட்டும் தான் உங்களுக்கு தோல்வி படமாக தெரிகிறதா?” என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here