நடிகை திரிஷாவிடம் லைவ் லொகேஷன் கேட்டு நடிகர் கார்த்தி கிண்டலடித்துள்ள டுவிட் பதிவு இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.

பொன்னியின் செல்வன்’

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கும் இப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் முதல் பாகமான “பொன்னியின் செல்வன்-1” வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வரவேற்பு – எதிர்பார்ப்பு

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவையாக திரிஷாவும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கிண்டல்

இந்த நிலையில், நடிகை திரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து அவரை கலாய்த்துள்ளார். அதில், “இளவரசி… ப்ளீஸ் உங்களின் லைவ் லொக்கேஷனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை ட்ராப் ஆஃப் பண்ணனும்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து பதிவிட்ட திரிஷா, சாரி, அரண்மனையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஸ்மார்ட் ஆட்களுக்கு அனுமதி இல்லை என்று பதிலளித்துள்ளார். இவர்களின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here