ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவை மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அந்நாட்டில் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு
ஜப்பானில் கடந்த 2006 – 2007 மற்றும் 2012 – 2020 வரை பிரதமராக பதவி வகித்தவர் ஷின்ஸோ அபே. அவர் அந்நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற இடத்தை பிடித்தவர். ஜப்பானின் நரா என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஸோ அபே பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த அவர்மீது மறைந்து இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சுட்டவர் யார், என்ன காரணம் ஏதும் இதுவரை தெரியவில்லை.
தீவிர சிகிச்சை?
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஷின்ஸோ அபே, சுயநினைவின்றி இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஷின்ஸோ அபே கவலைக்கிடமாக இருப்பதாக ஜப்பான் பிரதமர் புனியோ கிஷிடா கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.