பிரபல நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ, தெய்வ திருமகள் போன்ற வெற்றிப் படங்களில் நடித்த விக்ரம், சிறந்த நடிகருக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். தற்போது உருவாகி வரும் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தில் விக்ரம் ‘ஆதித்ய கரிகாலன்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.