உதகை அருகே கரடி ஒன்று சாலையில் மல்லாக்க படுத்துக்கொண்டு விட்டத்தை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். இங்கு வாழ்ந்து வரும் புலி, சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவிற்காக அவ்வப்போது ஊருக்குள் புகுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. சாலைகளில் யானைகள் மற்றும் கரடிகள் உலா வருவது இயல்பு. இந்த நிலையில், உதகை அருகே ‘வின்னர்’ படத்தில் வரும் வடிவேல் காமெடி போன்று “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது எவ்ளோ சுகம்” என்பதற்கேற்ப சாலையில் கரடி ஒன்று படுத்திருந்தது. இதனை அவ்வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். கரடியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here