மலையாளத்தில் உருவாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ‘பிரேமம்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நடிகை அனுபமா பரமேஸ்வரன் அப்படத்தில் நடித்த புகைப்படங்களை சமூக வளைதலங்களில் பகிர்ந்துள்ளார்.

சூப்பர் ஹிட் திரைப்படம்

தமிழில் நிவின் பாலி – நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ், அடுத்ததாக மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இதன்மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனராக அல்போன்ஸ் புத்ரன் உயர்ந்தார். கடந்த 2015ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்கள் பட்டியலில் ஒன்றானது. மலையாளம் மட்டுமில்லாமல் அனைத்து மொழி ரசிகர்களையும் இப்படம் கவர்ந்தது.

வசூல் சாதனை

நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘பிரேமம்’ திரைப்படம், 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. இதில் ஹீரோவாக நிவின் பாலி, மலர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி, மேரி ஜார்ஜாக அனுபமா பரமேஸ்வரன், செலின் ஆக மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். மூன்று அழகான பெண்கள், யதார்த்தம் நிறைந்த காதல், கண்ணீர், சோகம், நய்யாண்டி என இளைஞர்களுக்கு ஏற்ப படத்தை இயக்கி இருப்பார் அல்போன்ஸ் புத்திரன்.

நினைவலைகள்

‘பிரேமம்’ படத்தில் நடித்த அனுபமாவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அவரின் அழகிய சுருள் முடி பார்ப்பவர்கள் மனதை கொள்ளையடித்தது. அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கொடி’ படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்தார். பின்னர் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘குரூப்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ‘பிரேமம்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி அத்திரைப்பட படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நினைவு கூர்ந்துள்ளார் நடிகை அனுபமா. இதேபோல், மடோனா செபாஸ்டியனும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here