சென்னை கோயம்பேடில் தக்காளி விலை பாதியாக குறைந்து ரூ.50க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுள்ளனர்.
கிடிகிடுவென உயர்வு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கோடை மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தததால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, தக்காளி விலை உயர்வு மேலும் சுமையை கொடுத்தது.
பாதியாக குறைவு
இந்த நிலையில், மழை குறைந்ததையடுத்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலை பாதியாக குறைந்து இன்று கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ரூ.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை பாதியாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.