தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிந்து மாதவி டைட்டில் வின்னராக வெற்றி பெற்றுள்ளார்.
பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. கடந்த ஐந்து சீசன்களை விஜய் டிவி வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி மற்றும் ஐந்தாவது சீசனில் ராஜூவ் ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளனர்.
டைட்டில் வின்னர்
இந்தியா முழுவதும் பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கினார். இந்த போட்டியில் பங்கேற்ற கலந்துகொண்ட நடிகை நடிகை பிந்து மாதவி, தன் விளையாட்டு திறமையால் ஆரம்பித்தில் இருந்தே ரசிகர்களை கவர்ந்து வந்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் கிராண்ட் ஃபினாலேவில், பிந்து மாதவி, அகில் சர்தக், அரியானா குளோரி, அனில் ரத்தோட், பாபா பாஸ்கர், மித்ரா சர்மா மற்றும் ஷிவா உள்ளிட்டோர் இறுதிப் போட்டியில் இருந்தனர். இறுதியில் நடிகை பிந்து மாதவி முதல் இடத்தை பிடித்து ரூ.50 லட்சத்துக்கான காசோலையை தட்டிச்சென்றார். அகில் சார்தக் ரன்னரப்பாகவும், தொகுப்பாளர் ஷிவா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
தனித்திறமை
தமிழில் வெப்பம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், ஜாக்சன் துரை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. இவர், பொக்கிஷம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைதொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் இவர் நடித்த கழுகு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதுமட்டுமின்றி தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடிகை பிந்து மாதவி பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.