முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விடுதலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், நல்லவர்கள் வாழ வேண்டும், தீயவர்கள் வீழ வேண்டும் என்பது தான் நியதி எனத் தெரிவித்தார். தனது தாய் நிறைய வேதனைகளையும், வலிகளையும் அனுபவித்ததாக கூறிய அவர், தங்கள் பக்கம் இருந்த உண்மையும், நியாயமும் தங்களுக்கு வலிமையை கொடுத்ததாக தெரிவித்தார்.