தனக்கு திருமணம் நடைபெறாதது குறித்து நடிகை கங்கனா ரனாவத் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆதரவு, எதிர்ப்பு
பங்கா, ரங்கூன், குயின், தலைவி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை கங்கனா ரனாவத். சினிமாவை தாண்டி அரசியல் கருத்துகளையும் துணிச்சலாக முன்வைக்கும் இவருக்கு, ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே அளவிற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது. 
வதந்தி
இந்த நிலையில், கங்கனா ரனாவத் ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ள “தாக்காட்” திரைப்படம் வருகிற 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் உளவாளி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். இந்த திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கங்கனா ரனாவத், தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது; என்னை பலரும் ‘டாம்பாய்’ என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தவறு செய்யும் ஆண்களை தட்டிக் கேட்கும் பெண் என எண்ணுகின்றனர். ஆனால், நான் உண்மையில் அப்படி இல்லை. நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான பெண். யாரையும் இதுவரை அடித்ததுகூட கிடையாது. உங்களை போன்ற ஆட்கள் பரப்பி வரும் வதந்திகளால், எனது திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. இவ்வாறு நடிகை கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார்.















































