சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்ற – இறக்கம்

அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. கடந்த 2 தினங்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில், நேற்று நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலை குறைவு

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியான சரிவை கண்டிருக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது. ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.59 குறைந்து ரூ.4,764-க்கும், ஒரு சவரன் ரூ.38,112-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து 63 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.63,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மீதான விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here