கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஏராளமான நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்கள், ஊசி, சீப்பு போன்ற பொருட்களை விற்பனை செய்து, வாழ்ந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரிடம், அங்கிருந்த இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், அங்கு ரோந்து சென்ற போலீசிடம் புகார் அளித்தார். இதனையடுத்து தப்பிக்க முயன்ற இளைஞரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர். அப்போது தான் செய்தது தவறு எனவும், தன்னை மன்னித்துவிடுபடியும் கேட்டு சம்மந்தப்பட்ட இளைஞர், பெண் போலீஸ் காலில் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here