தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின்தடை ஏற்படுகிறது என்றார். மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 296 மெகா வாட் மின்சாரம் தற்போது வரை மத்திய அரசு வழங்கவில்லை எனவும் அதனால் தான் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டது என்றும் விளக்கமளித்தார். ஆனால், அதனை சமாளிக்க தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டிருப்பதாகவும் செந்தில் பாலாஜி கூறினார். மேலும் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படாதவாறு இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி அப்போது குறிப்பிட்டார்.