ரஷ்ய வீரர் துப்பாக்கியால் சுட்டதில் உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உயிரை ஸ்மார்ட்போன் காப்பாற்றிய அதிசய நிகழ்வு நடந்துள்ளது.
தொடர் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா 55வது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைன் ராணுவ வீரர்களும் – ரஷ்ய வீரர்களை எதிர்த்து தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். உக்ரைனை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. ஏராளமானோர் உயிரிழந்துள்ளடன், லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யாவால் இன்னும் கைப்பற்ற முடியாத நிலையில், தனது போர் வியூகத்தை ரஷ்யா மாற்றியமைத்துள்ளது.
போர் வியூகம்
அதன்படி, வான் வழி தாக்குதல்களை குறைத்துவிட்டு கருங்கடலில் இருந்து உக்ரைனின் கடற்கரை நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிழக்கு பகுதிகளை எளிதில் வீழ்த்தி தலைநகர் கீவ்வை கைப்பற்றிவிடலாம் என ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஆனால், உக்ரைன் கடற்படையினர் கடந்த சில தினங்களாக கருங்கடலில் மூர்க்கமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, உக்ரைனுக்கு அமெரிக்கா பெரும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
உயிரை காத்த ஸ்மார்ட்போன்
இந்த நிலையில் ரஷ்ய படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் உக்ரைன் வீரர் தான் பையில் வைத்திருந்த ஸ்மார்ட்போனால் உயிர் பிழைத்துள்ள அரிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. சுமார் 7.2 மி.மீ அளவுள்ள துப்பாக்கி தோட்டா ஒன்று ஸ்மார்ட்போனில் பட்டு அதிலேயே நின்று வீரரின் உயிரை காப்பாற்றியுள்ளது. இதுதொடர்பான சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.