நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் விளையாட்டு, இளைஞர் நலன் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் அமைச்சராகியிருப்பது ஆந்திர பிரதேசத்தில் என்றாலும் தன்னுடைய மாமியார் வீடு தமிழ்நாடுதான் என்றும் இதன் பெருமையை மெச்சும் வகையில் தாய் வீடான ஆந்திராவில் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here