புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. சில நேரங்களில் இவரது வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் அமைச்சரின் குறும்புத்தனமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடையில் இருக்கும் சிறுவனிடம், தான் அமைச்சர் என்பதை நிருபிக்க சந்திர பிரியங்கா செய்யும் சுட்டித்தனமான செயல்கள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.