திண்டுக்கல் அருகே மரியாதை குறைவாக பேசிய காவல் உதவி ஆய்வாளருக்கு வாகன ஓட்டுநர் தக்க பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கூம்பூர் காவல் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. ஒருவர், அவ்வழியே செல்லும் வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிவந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனையிட்ட எஸ்.ஐ., ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் சீருடை சரியில்லை எனக்கூறி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பணம் கொடுக்க மறுத்த ஓட்டுநரை எஸ்.ஐ. தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டுநர், “உங்க வீட்டுல ஆடு, மாடா மேய்க்கிறோம்… ஏய்ய்ய்..னு கூப்பிடுறீங்கன்னு“ கேட்டுள்ளார். பின்னர் ஓட்டுநரின் நண்பர் வீடியோ எடுப்பதைப் பார்த்த அந்த எஸ்.ஐ., சட்டென பேச்சை நிறுத்திவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.