காஸ்டியூம் டிசைனர் என்.ஜே.சத்யா திருமணத்தை நடிகராகவும், இயக்குனருமான சசிகுமார் முன்னுன்று நடத்தி வைத்துள்ளார்.
காஸ்டியூமர்
தெறி, பைரவா படங்களில் நடிகர் விஜய்க்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியவர் என்.ஜே.சத்யா. இவர் ஜிகர்தண்டா, ராஜா ராணி, போக்கிரி ராஜா, மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களிலும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் நடிகர்கள் சசிகுமார், நாசர், மனோபாலா, மன்சூர் அலிகான், சரவணன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரை வைத்து பல போட்டோஷூட்டுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வந்தார்.
வாழ்த்து மழை
இந்நிலையில், காஸ்டியூம் டிசைனர் என்.ஜே.சத்யாவுக்கும், கோகிலாவுக்கும் பொள்ளாச்சியில் இன்று திருமணம் நடந்துள்ளது. இவர்கள் திருமணத்தை நடிகர் சசிகுமார் முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். என்.ஜே.சத்யா – கோகிலா தம்பதிக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.