முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முத்லமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மரியாதை
திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்களான வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.
ரத்து
ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா நினைவு நாளன்று திமுகவினர் வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணத்தால் பேரணி ரத்து செய்யப்பட்டு நேரடியாக சென்று அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.