பெங்களூருவைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவரின் மகள் சவுமியா. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவர், நடிகர் ரஜினிகாந்த்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதை அந்த ரசிகர் வீடியோவாக வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கினார். இந்த வீடியோ குறித்து ரஜினியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, சவுமியாவிடம் ரஜினிகாந்த் வீடியோ காலில் பேசினார். அந்த வீடியோவில் ரஜினி பேசுகையில்; ஹலோ சவுமியா, எப்படி இருக்க.. உனக்கு ஒன்னும் ஆகாது.. சாரி கண்ணா என்னால உன்ன வந்து பாக்க முடியாது. இப்ப கொரோனா இருக்குறதனால, எனக்கும் உடம்பு சரியில்ல.. இல்லனா உன்ன வந்து பார்த்துருப்பேன் கண்ணா… தைரியமா இரு.. உனக்காக நான் பிரே பண்றேன். சிரிக்கும் போது நீ எவ்ளோ அழகாய் இருக்கே.. எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here