சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இம்மாதம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.
தியேட்டரில் ரிலீஸ்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து திரைப்படம் மாநாடு. சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம், கடந்து நவம்பர் மாதம் 25-ம் தேதி தியேட்டரில் வெளியானது.
OTTயில் ரிலீஸ்
மாநாடு திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம், டிசம்பர் 24-ம் தேதி OTT தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சோனி லைவ் OTTயில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகிறது.