கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடில், எந்தக் குழு வெளியேறப் போகிறது என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிரடி சரவெடி சுற்று

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் பொது பொழுபோக்குச் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பிரபல ரியாலிட்டி ஷோவான டான்ஸ் Vs டான்ஸ் சீசன்-2 என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால், இந்த வார இறுதி நாட்களை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்ற கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தயாராக இருக்கிறது. நடிகை குஷ்பு மற்றும் புகழ்பெற்ற நடன இயக்குனர் பிருந்தா ஆகியோரை நடுவர்களாக கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில், இந்த வாரத்தின் அதிரடி சரவெடிச் சுற்றில் போட்டியாளர்களின் துடிப்பான நடனங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்த காத்திருக்கின்றன. பிரபலமான இந்த நிகழ்ச்சியின் கௌரம்வம்மிக்க விருதை வெல்லப் போட்டி போடும் இந்த போட்டியாளர்களின் மாபெரும் யுக்தியை டிச.,18 மற்றும் டிச.,19 ஆகிய தேதிகளில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.

சிகர்களுக்கு விருந்து

ரசிகர்கள் மூச்சு விடுவதையே மறக்கச் செய்யும் அளவிற்கு 12 குழுக்களுக்கிடையே நடைபெறும் 5 போட்டிகள் இந்த வார இறுதி நாட்களின் எபிசோடுகளில் ஒளிபரப்பப்படுகிறது. நடன இயக்குனர் ஸ்ரீதர் குழுவைச் சேர்ந்த காவ்யா மற்றும் மகாலட்சுமி வழங்கும் தாய்லாந்து எல்இடி நடனம், நடிகர் ஷாம் குழுவைச் சேர்ந்த நாவலரசன் மற்றும் அலிஷா வழங்கும் ஸ்கேர்க்ரோ கருத்தாக்க நடனம், நடிகை அபிராமியின் குழுவைச் சேர்ந்த அபிராஜ் மற்றும் அஞ்சனாவின் போலீஸ் மற்றும் போக்கிரி கருத்தாக்க நடனம் மற்றும் நடிகை இனியாவின் வினோஷ் மற்றும் கபீர் வழங்கும் அரங்க ஒத்திகை கருத்தாக்க நடனம் என மாறுபட்ட வெவ்வேறு கருத்தாக்க அடிப்படையிலான நடனங்கள் இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடில் இடம்பெறுகின்றன. மேலும் பிரபல தொகுப்பாளர் ஷா மற்றும் நடுவர்களுக்கிடையே நிகழும் நகைச்சுவையான உரையாடல்களும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன.

எதிர்பார்ப்பு

இதோடு மட்டுமின்றி போட்டியிலிருந்து போட்டியாளர்களை வெளியேற்றுகின்ற சுற்றும் இந்த வார இறுதி எபிசோடில் இடம்பெற உள்ளன. இதன்மூலம் இப்போட்டியிலிருந்து ஒரு குழு வெளியேறி மற்ற குழுக்களை விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு எடுத்துச்செல்லும். இந்த பரபரப்பான போட்டியிலிருந்து எந்த குழு வெளியேறப்போகிறது? இந்த வார நட்சத்திரமாக வெல்லப்போகும் குழு எது? என்பதை அறிந்துகொள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். டிச.,18 மற்றும் டிச.,19 ஆகிய நாட்களில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள் என கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here