ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எனிமி’. இதில் ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி அன்று இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஷால் தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றார். இதற்காக திருப்பதி சென்ற அவர், கீழ் திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.