பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நமிதா மாரிமுத்து ஏழை மக்களுக்கு உணவு வழ்ங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
‘பிக் பாஸ்‘
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது மேலும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த நான்கு சீசன்களை விஜய் டிவி வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.
சீசன் 5
4 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இசைவாணி, சின்னப் பொண்ணு, இமான் அண்ணாச்சி உள்பட 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் ஒருவர். தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பிக்பாஸ் வீட்டில் நமிதா மாரிமுத்து பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது. இதன்மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நமிதா, அந்நிகழ்ச்சியில் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மருத்துவ காரணங்களுக்காக ஒரே வாரத்தில் வெளியேறினார்.
பாராட்டு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், நமிதா மாரிமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நமிதா மாரிமுத்துவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.