ரசிகர் ஒருவர் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த நடிகை வித்யுலேகா அவருக்கு காட்டமாக பதிலளித்துள்ளார். நீ தானே என் பொன்வசந்தம், தீயா வேலைசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்தவர் வித்யுலேகா. சில தினங்களுக்கு முன்பு சஞ்சய் என்பவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்தார். அதனை பார்த்த சிலர் வித்யுலேகாவை கடுமையாக விமர்சித்ததுடன், நீங்கள் எப்போது விவாகரத்து செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த வித்யுலேகா, அவர்களுக்கு சமூக வலைதளம் மூலம் காட்டமாக பதிலளித்துள்ளார்.















































