மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று பேசிய நடிகை கங்கனா, நிறைய தடைகளை கடந்து ‘தலைவி’ திரைப்படம் ரிலீஸை நெருங்கியுள்ளதாக தெரிவித்தார். இப்படத்தை காண ஒரு குழந்தையைப் போல் காத்திருப்பதாகவும், குறிப்பாக தமிழ் பதிப்பை காண ஆவலாய் இருப்பதாகவும் கூறினார்.















































