தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். பிரபல நடிகர் வடிவேலு நடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வடிவேலு, தனக்கு நல்ல நேரம் பொறந்தாச்சு எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தனது ரசிகர் மன்றம் என்றும் அவர்களின் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.















































