மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ரணம்

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைந்தார். இதனையடுத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் மதுசூதனின் உடல் தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதிமுகவினர் அஞ்சலி

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மசூதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மதுசூதனின் மரணம் தங்களை ஆற்றவுண்ணா துயரத்திலும், மிகுந்த வேதனையிலும் ஆழ்த்தியதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளனர். 

முதலமைச்சர் அஞ்சலி

இன்று காலை மதுசூதனின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் மதுசூதனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.

சசிகலா கண்ணீர்

இதனையடுத்து காலை 10 மணியளவில் மதுசூதனின் இல்லத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் வந்த சசிகலா, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண்ணீர் மல்க காணப்பட்டார். பின்னர் மதுசூதனனின் குடும்பத்தினருக்கு சசிகலா ஆறுதல் கூறினார். மதுசூதனன் மறைவால் நாளை வரை அதிமுக சார்பில் துக்க நாட்களாக அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here