தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அண்ணே அண்ணே ஸ்டாலின் அண்ணே… என பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டத்டில் ஈடுபட்டார்.