பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சனம் ஷெட்டி. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சனம் பதில் அளித்திருந்தார். அதில், உங்கள் திருமணம் எப்போது என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து சனம் ஷெட்டி பேசுகையில்; ஒரு பழைய பழமொழி இருக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்று. அது என்னுடைய விஷயத்தில் உண்மை. என்னையும் ஒருவர் காதலித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை ஒரு நாள் எனக்கான சரியான நபர் வரும்போது அது நடக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு சனம் உருக்கமாக பேசினார்.















































