சென்னை-28 உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், இயக்குநர் பெரோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் நிலன் என்ற மகன் உள்ளார். சமீபத்தில் தனது மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை விஜயலட்சுமி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர், அதனை கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற விஜயலட்சுமி, அந்த நெட்டிசனை கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here