எல்லா துறைகளிலும் ஆணாதிக்கம் இருப்பதாகவும், அது முதலில் குடும்பத்தில் இருந்துதான் வருகிறது என்றும் நடிகை வித்யா பாலன் கூறியிருக்கிறார்.
பாலிவுட் மகாராணி
பாலிவுட்டில் மகா ராணியாக திகழ்ந்து வருபவர் வித்யா பாலன். பெங்கால் மொழியில் தனது திரைப் பயணத்தை ஆரம்பித்தார் வித்யா பாலன். இதன்பின் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து, பல விருதுகளையும் வென்றுள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போயின. மற்ற மொழிகளை விட இந்தி திரையுலகில் தான் வித்யா பாலனுக்கு மார்க்கெட் அதிகம். நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் சுமிதாவாகவே வாழ்ந்தார். இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.
எதையும் சாதிக்க முடியும்
இந்த நிலையில், நடிகை வித்யா பாலன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ”ஆணாதிக்கம் எல்லா துறைகளிலும் இருப்பதாகவும், அது முதலில் குடும்பத்தில் இருந்துதான் வருகிறது என்றும் கூறியுள்ளார். தங்கள் வீட்டிலும் அது இருந்ததாக தெரிவித்த அவர், பெண்கள் உரிமையை பற்றி எல்லோரும் பேசினாலும், அது நடைமுறையில் இல்லை எனக் கூறியுள்ளார். பெண்கள் சமையல் அறைக்கு உள்ளேதான் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் சமையல் செய்யத்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்வது சரியல்ல. அவர்களால் எதையும் சாதிக்க முடியும் எனவும் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.