கைலாசா எனும் நாட்டை உருவாக்கி அங்கு தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா. கைலாசா எங்கு இருக்கிறது என்பது இன்னும் தெரியாமல் இருக்கும் நிலையில், அங்கிருந்து பேசுவது போன்ற வீடியோக்களை அடிக்கடி நித்யானந்தா வெளியிட்டு வருகிறார். கைலாசாவில் குடியேற விண்ணப்பம், ஹோட்டல் தொடங்கும் முயற்சி, ரிசர்வ் வங்கி, பல நாடுகளுடன் வர்த்தகம் என புதுப்புது தகவல்களை வெளியிட்டு, அங்கும் பிஸியாகவே இருக்கிறார் நித்தியானந்தா. இந்த நிலையில், ருத்ர கன்னிகளுடன் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நித்திக்கு திடீர் சோதனை வந்துள்ளது. கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்யானந்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், கைலாசா நாட்டின் மீது ‘பயோ வார்’ தொடங்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் கேட்காமலேயே சிலர் ‘‘மர்ம விதை’’களை அனுப்பி வைத்துள்ளதாகவும் நித்தியானதா தெரிவித்திருக்கிறார்.