தமிழகத்தில் ஊரடங்கை மேலும் கடுமையாக்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. கொரோனா பரவகைத் தடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கர்நாடக, டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, மக்கள் சிரமப்படாத வகையில் சில தளர்வுகளையும் அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் கருத்து

இந்த நிலையில், கொரோனா சிகிச்சை தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வரும் சென்னை உயர்நீதிமன்றம், கொரோனாவால் ஏற்படும் மரணம் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்களை தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றி அகற்ற வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியத்துடன் தகனம் செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கை மேலும் கடுமையாக்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here