கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று பொதுமக்களும், திரையுலகினரும் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் அஜித் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார்.