தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2-ம் அலை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய மத்திய – மாநில அரசுகள், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் முதல் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசி வரும் நிலையில், தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. அரசியல் கட்சியினர், திரையுலகினர், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா உறுதி

அந்த வகையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள அல்லு அர்ஜூன், ரசிகர்களும், நலம் விரும்பிகளும் கவலைப்பட வேண்டாம், தான் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here