‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதனைதொடர்ந்து குள்ளநரிக்கூட்டம், முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கும் அவரது முன்னாள் மனைவி ரஜினிக்கும் 2018ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது. இதனையடுத்து நடிகர் விஷ்ணு விஷாலும், பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் காதலித்து வந்தனர். கடந்தாண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here