பிரபல நடிகை நிக்கி கல்ராணியிடம் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் லட்சக்கணக்கில் பணமோசடி செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னணி நடிகை

‘டார்லிங்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த நிக்கி கல்ராணி ஹோட்டல் உரிமையாளர் மீது அங்குள்ள அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

பணமோசடி

அதில், கோரமங்களா பகுதியில் நிகில் என்பவர் நடத்தி வரும் ஹோட்டலில், கடந்த 2016-ம் ஆண்டு ரூ.50 லட்சம் முதலீடு செய்ததாகவும், இதற்காக மாதம் ரூ.1 லட்சம் கொடுப்பதாக கூறிய நிகில், இதுவரை அதனை கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தையும் திரும்ப கொடுக்காமல், அதுகுறித்து கேட்டால் சரியாக பதில் அளிப்பதில்லை எனவும் கூறியுள்ளார். தன்னிடம் பணமோசடி செய்துள்ள நிகில் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை நிக்கி கல்ராணி அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அம்ருதஹள்ளி காவல்துறையின், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here