தென் இந்திய திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சமீப காலமாக உலகளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. “ரவுடி பேபி”, “புட்ட போம்மா” பாடல்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடலும் உலகளவில் டிரெண்ட் ஆகி உள்ளது. ஏற்கனவே, “புட்ட போம்மா” பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும்,சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னரும் அவரது குடும்பத்தினரும் நடனமாடி வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைதொடர்ந்து தற்போது “வாத்தி கம்மிங்” பாடலுக்கு டேவிட் வார்னர் தனது அணி வீரர்களுடன் நடனமாடியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. .















































