கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விலை உயர்வு
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதன் காரணமாக கடந்த 1-ம் தேதி முதல் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இதனால் தங்கம் சவரன் ரூ.36 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. அதன்பின் 5-ந் தேதியில் இருந்து விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது. நேற்று தங்கம் ஒரு பவுன் ரூ.35,720-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.4,465 ஆக விற்பனை செய்யப்பட்டது.
பொதுமக்கள் கவலை
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.36,280-க்கு விற்பனையாய்றது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரு.4,535 ஆக உள்ளது. இதேபோல் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.75,200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.36 ஆயிரத்தை தாண்டி இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கவலை அடைய செய்துள்ளது.