விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அர்ச்சனா திடீர் என்டரி கொடுத்து அனைவருக்கும் செம்ம ஷாக் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் ரேகா, ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆரி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ஆஜித், சம்யுக்தா, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த 3 சீசன்களைப் போல், இந்த சீசனுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
புதுவரவு
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் திடீர் என்ட்ரி கொடுத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா. அவரின் திடீர் என்ட்ரியை பார்த்து உற்சாகமடைந்த மற்ற போட்டியாளர்கள், அர்ச்சனாவை கட்டியணைத்து வரவேற்றனர். தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் 4 துவக்க நிகழ்ச்சி அன்றே போட்டியாளராக உள்ளே வருவார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் அவருக்கு இருந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அப்போது அவர் செல்லவில்லை. தற்போது அந்த பிரச்சனை முடிந்துவிட்டதால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.