கோலிவுட்டில் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலின் திருமணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபருடன் திருமணம்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் வருகிற 30ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவர்களது திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
திடீர் மாற்றம்
இந்நிலையில், காஜல் அகர்வாலின் திருமணத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பதிலாக, காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.