ரசிகர்களால் அதிக வரவேற்பு பெற்று வரும் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பெரும் மாற்றங்கள் நடைபெற இருக்கிறது.
‘பிக் பாஸ்’
மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர்கள் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாட்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் விதி. சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த செய்திகள் அதிகளவில் இடம்பெறுவதால், இதில் இடம்பெறும் போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்து வருகின்றனர்.
பெரிய மாற்றம்
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் பிக் பாஸ் சீசன் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். 3வது சீசனை தொகுத்து வழங்கிய நாகார்ஜூனா, தற்போது 4வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசன்-3ல் நாகார்ஜூனா சில காரணங்களுக்காக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது சீசன் 4 துவங்கியுள்ள நிலையில், நாகார்ஜூனா நடித்து வரும் ‘வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. அதில் அவர் கலந்துகொள்ள இருப்பதால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு விடுப்பு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாகார்ஜூனாவுக்கு பதிலாக வேறு யார் தொகுத்து வழங்குவார்கள் என விரைவில் தெரியவரும்.
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.