பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸின் சோகக் கதையை கேட்ட சக போட்டியாளர்கள் கண்ணீர்விட்டு அழுத சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் ரேகா, ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆரி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ஆஜித், சம்யுக்தா, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த 3 சீசன்களைப் போல், இந்த சீசனுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கண்ணீர் கதை

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும், வாழ்வில் தங்களது சொந்த முயற்சியினால் கஷ்டப்பட்டு எப்படி முன்னேறினர் என்பது குறித்து கூறி வருகின்றனர். அந்த வகையில், பாலாஜி முருகதாஸ் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை தெரிவித்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. பள்ளி காலத்தில் தனது பெற்றோர்கள் தன்னை ஏதும் கண்டுகொள்ளவில்லை என்றும் நான் நானாகவே தான் வளர்ந்தேன் என்றும் கூறினார். சிறிது நேரத்தில் கண்ணீர் ததும்ப பேசிய பாலாஜி, தாய், தந்தை இருவருமே மதுவுக்கு அடிமையானதாகவும், பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை ஏன் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் ஏக்கத்துடன் தெரிவித்தார். பாலாஜி முருகதாஸ் பேசியதைக் கேட்ட ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட போட்டியாளர்கள் கண்ணீர் மல்க சோகத்தில் மூழ்கினர்.

பட்டங்களை வென்று சாதனை

சென்னையைச் சேர்ந்த பாலாஜி முருகதாஸ் தனது ஆரம்பக் கல்வியை கார்த்திகேயன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அழகு போட்டிகளில் கலந்துகொண்டு தனது தொழில்முறை பயணத்தைத் தொடங்கினார். 2017-ல் ‘மிஸ்டர் இந்தியா’, ‘மிஸ்டர் ஃபெர்பெக்ட் பாடி’ போன்ற பட்டங்களை வென்று புகழ் பெற்றார். 2018 ஆம் ஆண்டில் ‘ருபாரு மிஸ்டர் இன்டர்நேஷனல்’ போட்டியில் வென்றதோடு, 2019ல் நடந்த ‘மிஸ்டர் இன்டர்நேஷனல்’ போட்டியின் மூலம் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் ‘டைசன்’ என்னும் தமிழ் திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here