தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது திருமணம் தொடர்பாக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். 
தொடர் வதந்தி
தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். பிரபுதேவா மீதிருந்த அளவு கடந்த அன்பினால் அவருடைய பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தி கொண்டார் நயன்தாரா. மேலும், மதம் மாறி பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது நாம் அனைவருமே அறிந்ததுதான். தற்போது, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 5 வருடத்திற்கு மேலாக நயன்தாரா ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை கோலிவுட் வட்டாரம் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் உள்ளது. ரசிகர்கள் அவ்வபோது இவர்கள் திருமணம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஏதேனும் கிடைத்தால்கூட, அதை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து பெரிதாக்கிவிடுவார்கள். அந்த செய்திகளுக்கு இருவர் தரப்பிலிருந்தும் மறுப்பு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

முக்கிய முடிவு
இந்த நிலையில், தனது திருமணம் குறித்து நடிகை நயன்தாரா புது முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தேசிய விருது பெற்ற பின்னர் தான், திருமணம் என்ற முடிவை எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பல பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்திருந்தாலும், அவருக்கு இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயன்தாரா, ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து வருகிறார்.















































