விஜய் டிவி மூலம் பிரபலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

காமெடி நடிகர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அது இது எது’, ‘கலக்கப்போவது யாரு’ போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. வடிவேலு போன்று நடை, உடை, பாவனைகளில் அனைவரையும் வியக்க வைத்த அவர், தனது காமெடியாலும், முக பாவனைகளாலும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி மரணம்
கடந்த 15 நாட்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கை, கால்கள் செயலிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வடிவேல் பாலாஜி, இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அனைத்து காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்த வடிவேல் பாஜாலி, இன்று அனைவரையும் மனம் உடைய செய்துள்ளார். இவரது மரணச் செய்தியைக் கேட்டு பல முன்னணி நட்சத்திரங்கள் உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.