அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளிவந்து உள்ளது.

தமிழ் உரிமம்
ஹிந்தியில் மெகா ஹிட்டான படம் தான் அந்தாதுன், அப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பல முன்னணி நிறுவனங்கள் ரீமேக் உரிமைக்கு வலை வீசியது, பல போட்டிகள் நிலவிய இப்படத்திற்கு ரீமேக் உரிமையை பெற்றார் தியாகராஜன்.அதனால் அப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்தில் தபு கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தனர். அதற்காக பல முன்னணி நடிகைகளிடம் பேசப்பட்டது. மேலும் நயன்தாராவிடமும் அதை பற்றி பேசப்பட்டது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் தனது பெயர் கெட்டுவிடும் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த நயன்தாரா, பிறகு 4 கோடி ரூபாய் கொடுத்தால் நடிக்க சம்மதம் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் கேட்ட சம்பளம் அதிகம் என்பதனால் அவரை விட்டுவிட்டு பல முன்னணி நடிகைகளிடம் கேட்டிருக்கின்றனர்.

தபு தான் கரெக்ட்
அந்த பிரச்னைக்குரிய கதைக்களத்தில் நடிக்க எந்த நடிகையும் முன்வராததால் தமிழிலும் தபுவையே நடிக்க கேட்டிருக்கிறார்கள். அவர் கேட்ட சம்பளம் ஒத்து வர, அவரையே நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் இறுதியில் தொடங்குவதாக தெரிகின்றது . ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ,போன்ற பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் பிளாக் காமெடி த்ரில்லர் படம் என்பதால் தமிழில் எப்படி உருவாகப் போகிறது என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கின்றது. ஹிந்தியில் அப்படத்தை இயக்கினார் ஸ்ரீராம் ராகவன். இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப் போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது அப்படத்தில் நடிகர் நிதின் நடிக்கப்போவதாகவும் கூறுகின்றனர்.