மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓணம் பண்டிகை
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத் திருநாள் அன்று மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் 10 நாட்கள் திருவிழாவாக ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். சாதி, மத பேதமின்றி கேரளாவில் உள்ள அனைத்து மலையாள மொழி பேசும் மக்களால ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் பண்டிகை சற்று கலையிழந்து காணப்படுகிறது. இருப்பினும் கேரள மக்கள் தங்கள் வீடுகளில் பல வண்ணங்களில் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரித்துள்ளனர்.
சிறப்பான கொண்டாட்டம்
புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், விதவிதமான உணவு வகைகளை சமைத்து விருந்துண்டும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். கேரள மட்டுமின்றி கன்னியாகுமரி, உதகை, கூடலூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள், ஓணம் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.