ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கானின் சம்பளத்தை பற்றி அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வாயடைத்துப் போயினர்.
பிக் பாஸ்
சின்னத்திரை நிகழ்ச்சிகளிலேயே மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அனைத்து மொழியிலும் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை, ஒவ்வொரு மொழியிலும் முன்னணி ஹீரோக்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் கமலஹாசன், தெலுங்கில் நாகர்ஜுனா, ஹிந்தியில் சல்மான்கான் என்று அனைத்து மொழிக்கும் ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. ஊரடங்கு காரணமாக இவ்வளவு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்காமல் இருந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், தற்போது அதற்கான வேலையைத் துவங்கிவிட்டது. சமீபத்தில் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான புரொமோ வெளிவந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு மார்க்கெட் அதிகரிப்பது தான் இந்நிகழ்ச்சியின் முக்கியமான பிளஸ் பாயிண்ட்.
சம்பளம் எவ்வளவு?
இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது 4வது சீசனுக்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தெலுங்கில் அடுத்த மாதம் 6ம் தேதி பிக் பாஸ் சீசன் 4 தொடங்க இருக்கிறது. ஹிந்தியில் அக்டோபர் மாதம் தொடங்கப் போவதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும், நிகழ்ச்சியை பற்றியும், அதில் பங்கேற்கும் போட்டியாளர்களைப் பற்றி பேசினாலும், அதனை தொகுத்து வழங்கும் உச்ச நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் ஒரு கேள்வி இருந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது அதைப்பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இத்தனை கோடியா!
ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு ரூ.250 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஒரு எபிசோடுக்கு ரூ.10.25 கோடி என ஒரே நாளில் அவர் பங்கேற்கும் இரண்டு எபிசோடுகளுக்கு சேர்த்து ரூ.20.50 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்தப் பிரபல சேனல் நடத்தும் விருது நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பழைய சீசன்களுக்கு அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. பிக் பாஸ் 4 முதல் 6 வது சீசன் வரை ஒரு நாளைக்கு இரண்டரை கோடி ரூபாய் வாங்கியுள்ளார். 7வது சீசனில் ரூ.5 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ள சல்மான், 2014 ஆம் ஆண்டில் ரூ.5.5 கோடியாகவும், 2015ல் ரூ.8 கோடியாகவும், கடந்த சீசன் வரை ரூ.11 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது அவரது சம்பளம் ஒரு நாளுக்கு ரூ.20.50 கோடியாக உயர்ந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சால்மான் கானின் சம்பளத்தை கேட்ட ரசிகர்கள், வாயடைத்து போய் உள்ளனர். ஹிந்தியில் தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு இவ்வளவு சம்பளம் என்றால், தமிழில் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கும், தெலுங்கில் தொகுத்து வழங்கும் நாகர்ஜுனாவுக்கும் எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.