சபரிமலை அய்யப்பன் கோவி்லில் நவம்பர் மாதம் முதல் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமான பூஜைகள்
உலகப்புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் மாதத்தில் இருந்து விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. ஓணம் பண்டிகை, உத்ராடம் மற்றும் திருவோண சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. செப். 2ம் தேதி வரை பக்தர்கள் தரிசனமின்றி வழக்கமான பூஜைகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி?
இந்நிலையில், நவம்பர் 16ல் துவங்கும் மண்டல பூஜைக்காலம் முதல் சபரிமலையில் விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது நவம்பர் 16க்கு மேல் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.